/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
/
அரசு திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு
ADDED : செப் 18, 2025 11:40 PM
பல்லடம்; பல்லடம் வட்டாரத்தில் நடந்து வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை கலெக்டர் மனிஷ் நாரணவரே ஆய்வு மேற்கொண்டார்.
பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாணிக்காபுரம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், பருவாய் ஊராட்சி பகுதிகளில் நடந்து வரும் கனவு இல்லம், நாற்றங்கால் பண்ணை, வேளாண் சேமிப்புக் கிடங்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாலம் கட்டுமான பணி, கணினி ஆய்வகம் உள்ளிட்ட, பல லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சங்கமித்திரை, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் வேலுசாமி, பானுபிரியா உள்ளிட்டோர் ஆய்வில் உடன் பங்கேற்றனர்.

