ADDED : ஜன 21, 2024 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம் தாலுகா, மாதப்பூர் ஊராட்சியில், பா.ஜ., சார்பில், சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள் பிரதீப், பார்த்திபன், ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். முன்னதாக, மத்திய அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, அஞ்சல் துறை, மருத்துவம், வங்கி, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மத்திய அரசின் மானியத் திட்டங்கள் குறித்து விளக்கினர்.
வரும், 2047ல் இந்தியாவை தலை சிறந்த நாடாக உருவாக்க வேண்டும் என, உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் திட்டங்களை விளக்கும், காலண்டர் வழங்கப்பட்டது.

