/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பசுமை இழந்து வரும் கரும்பு பயிர்கள் நோய்த்தாக்குதலால் கவலை
/
பசுமை இழந்து வரும் கரும்பு பயிர்கள் நோய்த்தாக்குதலால் கவலை
பசுமை இழந்து வரும் கரும்பு பயிர்கள் நோய்த்தாக்குதலால் கவலை
பசுமை இழந்து வரும் கரும்பு பயிர்கள் நோய்த்தாக்குதலால் கவலை
ADDED : மார் 25, 2025 10:13 PM

உடுமலை; அதிக வெப்பம் உள்ளிட்ட காரணங்களால், கரும்பு பயிர்களில் நோய்த்தாக்குதல் பரவி வருவதால், ஏழு குள பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட குளங்களின் கீழ், 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள், நேரடி பாசன வசதி பெற்று வருகின்றன.
இப்பகுதியில், முன்பு கரும்பு பிரதான பயிராக இருந்தது. பல்வேறு காரணங்களால் அப்பகுதியைச்சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு, தென்னை உள்ளிட்ட மாற்று பயிர்களுக்கு மாறி விட்டனர்.
தற்போது பள்ளபாளையம், வடபூதனம், போடிபட்டி உள்ளிட்ட இடங்களில், குறைந்த பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஓராண்டு பயிரான கரும்பு, தற்போது அப்பகுதியில் வளர்ச்சி தருணத்தில் உள்ளது. இந்நிலையில், பயிர்களில் நோய்த்தாக்குதல் பரவி வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
பயிரின் இலைகள் முழுமையாக மஞ்சள் நிறத்துக்கு மாறி, வளர்ச்சி பாதிக்கிறது. நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தெரியாததால், பயிர்கள் முழுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில், 'அதிக வெப்பம் நிலவும் தருணங்களில், இத்தகைய நோய்த்தாக்குதல் ஏற்படுகிறது; பயிரின் வளர்ச்சி பாதித்தால், பிழிதிறன் குறைந்து, வெல்ல உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்படும்.
வேளாண்துறையினர் ஆய்வு செய்து, நோய்த்தடுப்பு பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இச்சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டு வருவதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'என்றனர்.