/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: வரும் 5ல் ஆலோசனை கூட்டம்
/
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: வரும் 5ல் ஆலோசனை கூட்டம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: வரும் 5ல் ஆலோசனை கூட்டம்
மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: வரும் 5ல் ஆலோசனை கூட்டம்
ADDED : பிப் 01, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;திருப்பூர் மாவட்டம் உடுமலையில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, வரும் ஏப்., 9ம் தேதி நோன்பு சாட்டப்படுகிறது. ஏப்., 16ம் தேதி கம்பம் போடுதலும், 24ம் தேதி திருத்தேரோட்டமும், 27ல் மகாஅபிேஷகமும் நடக்கவுள்ளது.
இத்திருவிழா தொடர்பாக, மண்டகப்படிதாரர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், சமூகத்தலைவர் ஆகியோரை கலந்தாலோசிக்கப்படுகிறது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் வரும் 5ம் தேதி மாரியம்மன் கோவிலில் நடக்கிறது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.