/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாய நிலத்தில் தொடரும் ஒயர் திருட்டு
/
விவசாய நிலத்தில் தொடரும் ஒயர் திருட்டு
ADDED : ஜன 10, 2024 12:13 AM
பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில், விவசாயம் மற்றும் கால்நடை தொழில் பரவலாக நடந்து வருகிறது.
பாசன நீர் மோட் டார்களுக்கு மின் இணைப்பு கொடுக்க,பல மீட்டர் மின் ஒயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
ஒயர்களில் உள்ள காப்பர் கம்பிகளை திருடுவதற்காக கும்பல் ஒன்று பல்லடம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளது. இரவு நேரங்களில், விளை நிலங்களில் முகாமிடும் திருட்டு கும்பல், மின் ஒயர்களை துண்டித்து எடுத்துச் செல்கின்றனர்.
பல்லடம் வட்டாரத்தில், கரைப்புதுார், கணபதிபாளையம், மாதப்பூர், பருவாய், கோடங்கிபாளையம், ஆறுமுத்தாம்பாளையம் என, இந்த நுாதன திருட்டு கும்பலின் கைவரிசை கிராமங்கள் வாரியாக நீண்டு வருகிறது. இதனால், சிறு, குறு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், வேதனை அடைகின்றனர்.
பல மாதங்களாக இந்நுாதன திருட்டு பரவலாக நடந்து வருகிறது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நுாதன திருட்டு கும்பலை கண்டறிந்து, கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

