/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணையில் விதிமீறல்களால் அபாயம்; விழிப்புணர்வு அவசியம்
/
அணையில் விதிமீறல்களால் அபாயம்; விழிப்புணர்வு அவசியம்
அணையில் விதிமீறல்களால் அபாயம்; விழிப்புணர்வு அவசியம்
அணையில் விதிமீறல்களால் அபாயம்; விழிப்புணர்வு அவசியம்
ADDED : மார் 25, 2025 09:36 PM
உடுமலை; உடுமலை அமராவதி அணையில், விதிமீறல்களை தடுக்க, பொதுப்பணித்துறை சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. கேரள மாநிலம் மறையூர் மற்றும் சுற்றுப்பகுதியில், மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகும் சிற்றோடைகள் வாயிலாக, அணைக்கு நீர் வரத்து கிடைக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் அணையில், முதலைகள் அதிகளவு காணப்படுகின்றன. இத்தகைய ஆபத்து இருப்பதால், அணைப்பகுதியில், குளிக்க சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுவதில்லை.
பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால், அணையின் நீர் தேக்க பகுதியில், சேறும், சகதியும், அதிகளவு உள்ளது.
அணையின் நீர்மட்டம், தொடர்ந்து சரிந்து வருவதால், கரையோரங்களில், சேறு அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் முதலைகள் நடமாட்டமும் உள்ளது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து அமராவதி அணைப்பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணியர், அணை நீர்த்தேக்க பகுதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அணையிலுள்ள சேறு மற்றும் முதலைகள் நடமாட்டம் குறித்து, சுற்றுலா பயணியருக்கு தெரிவதில்லை. இவ்வாறு, போதிய விழிப்புணர்வு இல்லாமல், சில ஆண்டுகளுக்கு முன், அணையில் குளித்த இருவர் சேற்றில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர்.
இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பொதுப்பணித்துறை சார்பில், எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.
அணையின் நுழைவாயில், பூங்கா உட்பட பகுதிகளில் இத்தகைய பலகைகள் வைப்பதால், சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படும். நீர் தேக்க பகுதி, சேறாக காணப்படுவதால், அணையில் குளிக்க தடை விதிக்க வேண்டும். மேலும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஆட்களை நியமிக்க வேண்டும்.