/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'வளர்ச்சி அடைந்த பாரதம்' அவிநாசியில் கண்காட்சி
/
'வளர்ச்சி அடைந்த பாரதம்' அவிநாசியில் கண்காட்சி
ADDED : ஜன 19, 2024 04:16 AM

அவிநாசி : அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் 'நமது லட்சியம்; வளர்ச்சி அடைந்த பாரதம்,' நிகழ்ச்சி நடந்தது.
கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சங்கீதா கலந்து கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்கள் கீழ் சுகாதாரத்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து மக்கள், 'நமது லட்சியம்; வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் நந்தகுமார், இணை அமைப்பாளர் கதிர்வேல், மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் திருமலை ராவ், அவிநாசி பாரத ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் ரகுபதிராஜா, வேட்டுவபாளையம் ஊராட்சி தலைவர் கணேசன், அவிநாசி சட்டசபை தொகுதி அமைப்பாளர் முருகன், துணை அமைப்பாளர் சண்முகம், நகர பா.ஜ., தலைவர் தினேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

