/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபம் ஏற்றி ஸ்ரீராமரை நினைந்த பக்தர்கள்
/
தீபம் ஏற்றி ஸ்ரீராமரை நினைந்த பக்தர்கள்
ADDED : ஜன 23, 2024 01:27 AM

திருப்பூர்;ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், பக்தர்கள் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. நாடு முழுவதும், கும்பாபிேஷக விழாவை மக்கள் கொண்டாடினர். நேற்று மாலை, வீடுகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டனர்.
திருக்கோவில் மற்றும் திருத்தொண்டர் அறக்கட்டளை சார்பில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், அகல் விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு, ஐந்து அகல் விளக்கு, எவர்சில்வர் தட்டு, நல்லெண்ணெய், திரி ஆகியவை வழங்கப்பட்டது. பக்தர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என்று உச்சரித்தபடி, தட்டில் பஞ்ச தீபம் ஏற்றி வைத்து, கோவிலை வலம் வந்து வழிபட்டனர். பிறகு, தீபம் ஏற்றி வைக்கும் இடத்தில் தீபம் வைத்து வழிபட்டனர்.
விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முன்சீப் ஸ்ரீனிவாசபுரம், ஸ்ரீராம பஜனை மடத்தில், சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீராமர் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, சீதா -ராமர் படம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்; கூட்டு பஜனையும் நடந்தது.
திருவிளக்கு வழிபாடு
திருப்பூர் பார்க்ரோடு, ஸ்ரீராகவேந்திரர் கோவிலில், ஸ்ரீராமர் சிறப்பு அலங்கார பூஜை நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, ராமர் அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜையும், அதனை தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடும், ஸ்ரீராமபஜனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
ஸ்ரீராம நாம லிகித ஜபம்
திருப்பூர் திருப்பதி கோவிலில்,நேற்று மாலை, 6:00 முதல், 8:00 மணி வரை, கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதி முன்பாக அமர்ந்து, ஸ்ரீராம நாம லிகித ஜபம் நிகழ்த்தினர். குடும்பத்துடன் வந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் அமர்ந்து, ஸ்ரீராமபிரான் அருள்வேண்டி, ஸ்ரீராம நாம லிகித ஜபம் செய்தனர்.

