/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
/
மாநகர போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
ADDED : ஜூன் 24, 2025 11:48 PM

திருப்பூர்; திருப்பூரில் மாநகர போலீசாருக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் உட்பட, 60 பேர் பங்கேற்றனர்.
கமாண்டோ பயிற்சி பள்ளி மற்றும் திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள மக்களை காக்கும் பொருட்டு, அதற்கு தேவையான பயிற்சி குறித்து கடந்த, மூன்று நாட்களாக திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் நடந்து வருகிறது.
கமாண்டோ பயிற்சி பள்ளியை சேர்ந்த பயிற்சியாளர்கள் எஸ்.ஐ., பழனி, போலீஸ் ஏட்டு சுவிக்கின் ராஜ், ஸ்ரீதர், ரியாஸ் ஆகியோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதில், திருப்பூர் மாநகர போலீசில் உள்ள சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை போலீசார் உட்பட, 60 பேருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதில், வெள்ள மீட்பு, முதலுதவி, மரம் அறுக்கும் இயந்திரத்தை இயக்கும் பயிற்சி, டவர் லைட் இயக்கும் பயிற்சி ஆகியவை குறித்து தெரியப்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் - மங்கலம் ரோடு ஆண்டிபாளையத்தில் உள்ள படகு குளாத்தில் நேற்று போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதில், மாநகர போக்குவரத்து உதவி கமிஷனர் சேகர் மற்றும் போலீசாருக்கு தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.