/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.9.18 லட்சம் மோசடி; போலீசில் மூதாட்டி புகார்
/
ரூ.9.18 லட்சம் மோசடி; போலீசில் மூதாட்டி புகார்
ADDED : செப் 26, 2025 06:33 AM
திருப்பூர்; திருப்பூர், ராயபுரத்தை சேர்ந்தவர், 60 வயது மூதாட்டி. இவரது மொபைல் போன் சமூக வலைதளத்தில், பகுதி நேரம் வேலை மூலம் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்தார்.
இதனை நம்பிய அவர், குறிப்பிட்ட செயலிக்குள் சென்று பிரத்யேக ஐ.டி., பாஸ்வேர்ட் உருவாக்கினார். கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதற்கான ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். இந்த வேலைக்கு, குறிப்பிட்ட பணம் வங்கியில் வரவு வைக்கப்பட்டது. தொடர்ந்து, பணம் முதலீடு செய்தால், கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதனை நம்பி, பல்வேறு தவணையாக, 9 லட்சத்து, 18 ஆயிரம் ரூபாய் செலுத்தினார். பின், பணத்தை எடுக்க முயன்ற போது, மேலும் பணத்தை கட்ட கூறினர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து, சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மோசடி நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.