/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செண்டுமல்லி விலை கிடைக்க எதிர்பார்ப்பு
/
செண்டுமல்லி விலை கிடைக்க எதிர்பார்ப்பு
ADDED : பிப் 06, 2024 01:38 AM
உடுமலை:முகூர்த்த சீசனில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், செண்டுமல்லி உட்பட பூ சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
உடுமலை பகுதிக்கு, மல்லி உட்பட மலர்கள், பிற மாவட்டங்களில் இருந்தே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
புங்கமுத்துார், தளி, பாப்பனுாத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பகுதிகளில், ஆயுத பூஜை சீசனுக்காக, கோழிக்கொண்டை, செண்டு மல்லி உட்பட சாகுபடிகளை, விவசாயிகள் மேற்கொள்வது வழக்கம்.
சொட்டு நீர் பாசன முறையால், குறைந்த தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில், தற்போது பரவலாக பூக்கள் சாகுபடியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஈடுபட துவங்கியுள்ளனர். தற்போது பெரியகோட்டை சுற்றுப்பகுதியில், செண்டு மல்லி சாகுபடி செய்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை, சத்தியமங்கலம் உட்பட பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம்.
ஏக்கருக்கு, 12 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்து, 60 நாட்களில், பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில், நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.

