/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுண்கலைத் திருவிழா; மாணவியர் அசத்தல்
/
நுண்கலைத் திருவிழா; மாணவியர் அசத்தல்
ADDED : பிப் 02, 2024 12:34 AM

திருப்பூர்;திருப்பூர் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று நுண்கலைத் திருவிழா, மாணவியருக்கான படைப்பாற்றல் திறன் விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் எழிலி தலைமைவகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் கிரிஜா ஆரோக்கியமேரி வரவேற்றார்.
காய்கறிகளை கொண்டு நெருப்பில்லாமல் உணவு தயாரிப்பது, கழிவு பொருட்களை கொண்டு சிறப்பான பொருட்களை உருவாக்குவது, காய்கறிகளில் கலைவண்ணமான பொருட்களைச் செய்வது ஆகிய தலைப்புகளில் மாணவியர் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
முன்னதாக, அரங்கில் நடந்த அனைத்து துறை மாணவியருக்கான தனிநபர், குழு நடனம் பார்வையாளர்களை கவர்ந்தது. பல்வேறு போட்டிகளில், 14 துறைகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவியர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் தமிழ்மலர், வரலாற்றுத்துறை பேராசிரியர் கருப்பையா ஒருங்கிணைத்தனர். கல்லுாரியின் நுண்கலை பிரிவு தலைவி ஜோதிபிரீத்தா நன்றி கூறினார்.

