ADDED : ஜன 19, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர் திருவிழாவுடன் துவங்கியது.
நாளை மாலை, 6:00 மணிக்கு வீரகாளியம்மன் மலைக் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகம், 12:00 மணிக்கு விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்ற வைபவம் நடக்கிறது. பின், மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடக்கிறது.

