sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

/

மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை

மலையடிவாரத்தில் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகளால் வனச்சூழல் பாதிப்பு! கோட்ட குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை


ADDED : மார் 25, 2025 10:19 PM

Google News

ADDED : மார் 25, 2025 10:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மேற்கு தொடர்ச்சிமலையடிவார பகுதியில், அரசுத்துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளதால், வனச்சூழல் பாதிப்பதோடு, வன விலங்குகளும் வழித்தடம் மாறி வருவதால் பாதிப்பு ஏற்படுவதாக, குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.

உடுமலையில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் குமார் தலைமையில் நடந்தது. அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

விவசாயிகள் பேசியதாவது:

மேற்கு தொடர்ச்சிமலையில், திருமூர்த்திமலை அடிவாரப்பகுதிகளில், தளி, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை மற்றும் திருமூர்த்தி அணை நீர் தேங்கும் பரப்பில் பல நுாறு ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

மலையடிவாரத்தில் துவங்கி, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்று பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள், ஓடைகள், கல்லாங்குத்து வாரி, மலைக்கரடுகள் என இருந்த அரசு நிலங்களில், பல்வேறு வகையான மரங்களும், செடி, கொடிகள் என பசுமையாக இருந்தன.

அவற்றை அழித்து, தென்னை மரங்களாகவும், ரிசார்ட்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. மேலும், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து, சட்ட விரோதமாக மின்சார வேலிகளாகவும் மாற்றப்படுகிறது.

பாரம்பரியமாக யானைகள் மற்றும் வன விலங்குகள் உணவு, குடிநீர், ஓய்வுக்கு பயன்படுத்தி வந்த நிலங்கள், வழித்தடம் அழிக்கப்பட்டுள்ளதால், வனச்சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வன விலங்குகளும் பாதிப்பதோடு, உணவு, குடிநீருக்காக விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன. மலையடிவார பகுதிகளில் வாழ்ந்த, நரிகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள், பறவை இனங்கள் அழிந்து விட்டன.

மயில்கள், முள்ளம்பன்றிகள், காட்டுப்பன்றிகள் பல கி.மீ., துாரத்திற்கு பரவி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

எனவே, திருமூர்த்திமலையடிவார பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, மலையடிவாரத்திலிருந்த, வனச்சூழல் மற்றும் பல்லுயிரின பாதுகாப்பை மீண்டும் உருவாக்க வருவாய்த்துறை, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.ஏ.பி., திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாயில், வன விலங்குகள் நீர் அருந்த ஒரு பகுதியில் சரிவு அமைப்பு இருந்தது.

தற்போது புதுப்பிக்கப்பட்டபோது, அவை அகற்றப்பட்டதால், தற்போது வன விலங்குகள் தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் போது, கால்வாயில் விழுந்து பலியாகும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

வனப்பகுதியில் வறட்சி நிலவி வருவதால், வன விலங்குகளுக்கு குடிநீர் வசதி செய்து தருவதோடு, காண்டூர் கால்வாயில் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

சந்தையில் கட்டணக்கொள்ளை


உடுமலை நகராட்சி வாரச்சந்தையில், கமிஷன் மண்டி உரிமையாளர்கள் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதோடு, நுழைவு கட்டணம், கமிஷன் என கட்டணக்கொள்ளை நடக்கிறது.

மேலும், காய்கறி கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், சுகாதார கேடு ஏற்படுகிறது. சந்தை வணிக வளாகத்தில், மாடு, ஆட்டுக்கறி, மீன் கடைகள் அதிகளவு காணப்படுவதால், காய்கறி சந்தை, இறைச்சி சந்தையாக மாறியுள்ளது. இதனை முறைப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க!

விவசாயிகள் மேலும் கூறியதாவது: உடுமலை நகராட்சிக்கு அருகிலுள்ள பெரியகோட்டை, கணக்கம்பாளையம், சின்னவீரம்பட்டி, போடிபட்டி ஆகிய கிராமங்களிலுள்ள நிலச்சீர்த்திருந்த நிலங்கள், பூமிதான நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க வேண்டும்.உடுமலை கால்வாயில், கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் குப்பை கரையோரங்களில் கொட்டப்பட்டு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இவற்றை அகற்றி, பாதுகாக்க வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி அளிக்க வேண்டும்.தென்னையில் நோய் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட மரங்கள் அகற்ற நிதி வழங்கப்பட்டது. ஆனால், மறு நடவுக்கான கன்றுகள் வழங்கவில்லை. கல்லாபுரம் கால்வாயில், 58வது மடையில் உள்ள அரணி வாய்க்கால் அழிக்கப்பட்டதால், 90 ஏக்கர் பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கின்றனர். அரசு வாய்க்காலை மீட்க வேண்டும்' என்றனர்.








      Dinamalar
      Follow us