/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 23, 2024 01:39 AM

உடுமலை;உடுமலையில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உடுமலை தாலுகா அலுவலகம் முன், அரசு ஊழியர் சங்கம் வட்டக்கிளை சார்பில், மருத்துவ காப்பீடு திட்டத்தில், மோசடியில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும், திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டக்கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், வேளாண் துறை அலுவலர் சங்க மாவட்டத்தலைவர் வைரமுத்து, அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் புஷ்ப வள்ளி,
கால்நடை உதவியாளர் சங்கம் ஜோதி, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் மதன் குமார், கிராம உதவியாளர் சங்கம் முத்துச்சாமி, சத்துணவு ஊழியர் சங்கம் எலிசபெத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

