/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஹிட் அண்ட் ரன்' சட்டம்; டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
/
'ஹிட் அண்ட் ரன்' சட்டம்; டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 19, 2024 04:23 AM

திருப்பூர் : சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில தலைவர் பத்மராஜ் தலைமை வகித்தார். சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, கோஷங்கள் எழுப்பினர். 'ஹிட் அண்ட் ரன்' என்கிற விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடும் டிரைவர்களுக்கு, பத்து ஆண்டு சிறை மற்றும் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும்.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும், பார்க்கிங், ரெக்கவரி வேன், குளியல், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். டிரைவர்களுக்கு பணி பாதுகாப்பு செய்துகொடுக்கவேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிடவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

