ADDED : பிப் 06, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, 35 இடங்களை நிரப்பும் வகையில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.
இதற்காக, 38 ஆண், 11 பெண் என, 49 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இச்சூழலில், ஊர்க்காவல் படையினருக்கான நேர்முகத்தேர்வு நடந்தது. ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் மனோகரன், மாநகர ஊர்க்காவல் படை மண்டல தளபதி பன்பரசு தலைமையில் நடந்தது. இதில், பங்கேற்றவர்களுக்கு நேர்முகம் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும் நடந்தது.

