/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹைதராபாத் - கடப்பா அணிகள் அசத்தல்
/
ஹைதராபாத் - கடப்பா அணிகள் அசத்தல்
ADDED : ஜன 19, 2024 04:20 AM

திருப்பூர் : ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி பவுலர்களால், நிலைகுலைந்த, நெக்ஸ்ட் அகாடமி அணி, 109 ரன் எடுப்பதற்குள், அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
திருப்பூர் அருகே முருகம்பாளையம், ஒயர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில், டி.எஸ்.சி., சேலஞ்சர் டிராபி கிரிக்கெட் போட்டி, திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் சார்பில், 13ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. 'ஏ' மற்றும் 'பி' பிரிவில், தலா நான்கு அணிகள் வீதம், எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
நேற்று நடந்த போட்டியில், டாஸ் வென்ற கிரிக்கெட் நெக்ஸ்ட் அகாடமி அணி, பேட்டிங் செய்து, 27.5 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 105 ரன் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி, 17.3 ஓவரில், மூன்று விக்கெட் இழப்புக்கு, 109 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த அணியின் பேட்ஸ்மேன், கரூவ் ரவீந்திரன், 39 ரன் எடுத்தார். 3.5 ஓவர் வீசி, 14 ரன் கொடுத்து, நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, நெக்ஸ்ட் அகாடமி அணியின் வெற்றியை தட்டி பறித்த, ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணி பவுலர் ஆகாஷ்குர்ரே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
'கடப்பா' வெற்றி
மதியம் நடந்த மற்றொரு போட்டியில், 'டாஸ்' வென்ற அனந்தபூர் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி, பேட்டிங்கை தேர்வு செய்து, 30 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 147 ரன் எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய, கடப்பா, யு.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணி, 23.1 ஓவரில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பேட்ஸ்மேன் ரோஹித்வர்மா, 68 ரன் எடுத்தார். 68 ரன் எடுத்து, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற, ரோஹித்வர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதி போட்டி
முதல் அரையிறுதியில் திருப்பூர் ஸ்கூல் ஆப் கிரிக்கெட் அணி - கடப்பா ஓய்.எஸ்.ஆர்., கிரிக்கெட் அசோசியேஷன் அணியுடன் மோதுகிறது. மற்றொரு அரையிறுதியில், சென்னை டான்போஸ்கோ அணி - ைஹதராபாத் கோச்சிங் பியாண்ட் அணியை எதிர்கொள்கிறது. வெற்றி பெறும் இரு அணிகள், நாளை (20ம் தேதி) இறுதி போட்டியில் மோதுகின்றன.

