/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தை பிறந்தால் வழி பிறக்கும்' பட்டு விவசாயிகள் நம்பிக்கை
/
'தை பிறந்தால் வழி பிறக்கும்' பட்டு விவசாயிகள் நம்பிக்கை
'தை பிறந்தால் வழி பிறக்கும்' பட்டு விவசாயிகள் நம்பிக்கை
'தை பிறந்தால் வழி பிறக்கும்' பட்டு விவசாயிகள் நம்பிக்கை
ADDED : ஜன 13, 2024 11:55 PM
பொங்கலுார்;சீனாவில் இருந்து வரும் பட்டுக்கூடுகளின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அதன்பின் இந்திய பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகளுக்கு கணிசமான விலை கிடைத்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன் தரமான பட்டுக்கூடுகள் கிடைத்தது. அப்போது ஒரு கிலோ, 600 ரூபாய்க்கு குறையாமல் விலை போனது. மழை காலம் துவங்கியதும் பட்டுக்கூடுகள் அதிக ஈரப்பதம் காரணமாக நோய் தாக்குதல் எற்பட்டு தரம் குறைந்தது. அதிக ஈரப்பதம் பட்டு கூடுகளில் இருந்து நுால் பிரித்தெடுக்கும் பணியில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பட்டுக்கூடுகளின் விலை சரிந்தது. தற்பொழுது ஒரு கிலோ, 450 முதல், 500 ரூபாய் வரையே விலை போகிறது.
வடகிழக்கு பருவமழை விடைபெறுகிறது. தை மாதத்தில் இருந்து இளவேனிற் காலம் என்பதால் தரமான பட்டுக் கூடுகள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. பட்டு நுால் நுாற்பவர்களுக்கு நுால் நுாற்பதில் பிரச்னை குறைந்து விலை ஏறுமுகமாக இருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பட்டு கூடு விலை உயரும் என்பதால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

