ADDED : மார் 26, 2025 12:22 AM

அவிநாசி; ரம்ஜான் திருநாளை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, தேவராயம்பாளையம் கிளை த.மு.மு.க., சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு த.மு.மு.க, கிளைத் தலைவர் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நஸ்ருதீன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜபருல்லா வரவேற்றார்.
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அபுசாலி மற்றும் த.மு.மு.க., மாநில செயலாளர் கோவை சாகுல் ஹமீது சிறப்புரையாற்றினார்.
தேவராயம்பாளையம் மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தலைவர் சலீம் முத்தவல்லி உமர்சாலி, செயலாளர் முஸ்தபா, பொருளாளர் ஜபருல்லா உட்பட நிர்வாகிகள் மற்றும் திருமுருகன் பூண்டி தி.மு.க., நகர செயலாளர் மூர்த்தி, இந்திய கம்யூ., நகர செயலாளர் பொன்னுசாமி, மா.கம்யூ.,நகர செயலாளர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் தேவராஜ், பாரதி, சம்சாத் பேகம்,மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.