/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மனித உரிமைகளை விடா முயற்சியுடன் செயல்படுத்துங்க! கருத்தரங்கில் வலியுறுத்தல்
/
மனித உரிமைகளை விடா முயற்சியுடன் செயல்படுத்துங்க! கருத்தரங்கில் வலியுறுத்தல்
மனித உரிமைகளை விடா முயற்சியுடன் செயல்படுத்துங்க! கருத்தரங்கில் வலியுறுத்தல்
மனித உரிமைகளை விடா முயற்சியுடன் செயல்படுத்துங்க! கருத்தரங்கில் வலியுறுத்தல்
ADDED : செப் 18, 2025 11:36 PM

திருப்பூர்; மனித உரிமைகளை விடா முயற்சியுடன் செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க துணை தலைவர் இளங்கோவன் பேசியதாவது: மனித உரிமைகளுக்கான கையடக்க கடமையீடு, ஐரோப்பாவில் விழிப்புணர்வு அடைந்த முக்கியமான நடைமுறையை மாற்றி வருகிறது. பல ஐரோப்பிய நாடுகள், இதற்கான கட்டாய சட்டங்களை இயற்றியுள்ளன. பிரான்ஸ், 2017ல், நெதர்லாந்து, 2019ல், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே நாடுகள் 2021 ல் இந்த சட்டங்களை கொண்டுவந்துள்ளன.
ஏற்றுமதி செய்வது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒழுங்குமுறை தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய காலம் இது. ஆகவே, பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பிராண்டட் நிறுவனங்களுக்கு, அவர்கள் வியக்கும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் எவ்வாறு வினியோக சங்கிலியை விழிப்புடன் செயல்படுத்துகிறது என்பதை விளக்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக் குமரன்: இந்திய பொருளாதாரத்தில் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. உலகளாவிய வர்த்தகர்களின் மிக முக்கியமான வாங்கும் மையமாக திருப்பூர் உள்ளது.
வர்த்தகர்கள், விலைக்கும், வினியோக நேரத்துக்கும் மேலாக, தயாரிப்பு நேர்மை, பணியாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். இந்நிலையில், சி.எஸ்.டி.டி., - எச்.ஆர்.டி.டி., ஆகியவை சவால்கள் அல்ல; நமக்கான வாய்ப்பு வழங்க கூடியதாக உள்ளன.
திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்கிற இலக்கை அடைவதற்கு, இந்த நிலைப்பாடுகள் கைகொடுக்கும். சி.எஸ்.டி.டி., - எச்.ஆர்.டி.டி., உடன் இணைவதன் வாயிலாக, இந்திய ஏற்றுமதியாளர்கள், உலகளாவிய வர்த்தகர்களுக்கு விருப்பமான தேர்வாக இருப்பதை உறுதி செய்யலாம்.
ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிராண்டிங் மற்றும் வணிக ஊக்குவிப்பு துணைக்குழு தலைவர் ஆனந்த்: திருப்பூர், பின்னலாடை தயாரிப்புகளின் பிரதான மையமாக உள்ளது. தற்போது, ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியும், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டு உற்பத்தியும் செய்கிறது.
எச்.ஆர்.டி.டி., என்பது தொழில் துறையில் பலர் ஏற்கனவே செயல்படுத்திவரும் ஒரு நடைமுறை கட்டமைப்பாகும். அதேநேரம், கார்பரேட் சஸ்டைனபிலிட்டி டியூடிலிஜென்ஸ் டைரக்டிவ் (சி.எஸ்.டி.டி.டி.) என்பது வளர்ச்சியில் உள்ள ஒரு சட்டப்பூர்வ கடமை.

