/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மண்பானை தொழிலுக்கு வரி கல்வெட்டுகளில் தகவல்
/
மண்பானை தொழிலுக்கு வரி கல்வெட்டுகளில் தகவல்
ADDED : ஜன 24, 2024 01:30 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், காங்கயம் - பரஞ்சேர்வழியில், சுகந்த குந்தளாம்பிகை உடனமர் மத்தியபுரீஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் கோவில்கள் உள்ளன. இங்கு திருப்பணியின் போது, கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்த, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ரவிக்குமார், பொன்னுசாமி கூறியதாவது:
இந்திய வரலாற்று பேராசிரியர் சுப்பராயலு, கல்வெட்டின் கிரந்த எழுத்துக்களை வாசித்து பார்த்து, 'ஹர்ரிம், ஹஸ்த்தா, ஷாம், லம்' போன்ற சொற்களே அதிகம் உள்ளதாக தெரிவித்தார்.
இவ்வகை மந்திர கல்லை போற்றி வழிபட்டால், மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் நோயை குணப்படுத்தும் என்பது ஐதீகம்.
அக்காலகட்டத்தில், மண்பானை தொழில் சிறப்புற்று இருந்ததால், வரி விதிக்கப்பட்டதை இந்த கல்வெட்டுகளால் அறிய முடிகிறது. இந்த கல்வெட்டுகள் 11 மற்றும் 16ம் நுாற்றாண்டுகளை சேர்ந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

