/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோழி இறைச்சிக்கழிவால் நிறையும் ஜம்மனை ஓடை! தெரு நாய்களால் மக்களின் நிம்மதிக்கு தடை
/
கோழி இறைச்சிக்கழிவால் நிறையும் ஜம்மனை ஓடை! தெரு நாய்களால் மக்களின் நிம்மதிக்கு தடை
கோழி இறைச்சிக்கழிவால் நிறையும் ஜம்மனை ஓடை! தெரு நாய்களால் மக்களின் நிம்மதிக்கு தடை
கோழி இறைச்சிக்கழிவால் நிறையும் ஜம்மனை ஓடை! தெரு நாய்களால் மக்களின் நிம்மதிக்கு தடை
ADDED : மார் 26, 2025 11:34 PM

திருப்பூர்; கோழி இறைச்சிக்கழிவுகளை கொட்டுவதால், முருகம்பாளையம் ஜம்மனை ஓடை, தெருநாய்கள் முகாமிடும் இடமாக மாறிவிட்டதாக, பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் இயங்கும் ஆடு மற்றும் கோழி இறைச்சிக்கடைகளுக்கு, பெரிய கட்டுப்பாடு கிடையாது. ஆடு வதைக்கூடங்களும் முறையாக இயங்குவது இல்லை. கோழி இறைச்சி விற்கும் கடைகளில் இருந்து, சேகரமாகும் இறைச்சிக்கழிவுகளை, அப்புறப்படுத்தும் வழிமுறை தெரியாமல், ஆங்காங்கே கொட்டப்படுகின்றன.
குறிப்பாக, பிராய்லர் கோழி தோலுடன் உரிக்கப்படுகிறது; குடல் உள்ளிட்ட சில பாகங்களும் கழிவாக கொட்டப்படுகிறது. கோழி இறைச்சிக்கடைகள், ஞாயிறு, புதன் மற்றும் வியாழக்கிழமை இரவுகளில், சேகரமாகும் கழிவுகளை கொண்டு சென்று, ஆங்காங்கே கொட்டிச்செல்கின்றனர்.
தெருநாய்களுக்கு இறைச்சி கிடைப்பதால், இறைச்சிக்கழிவு கொட்டும் இடங்களில் எல்லாம், தெருநாய்கள் முகாமிட்டு, மக்களை அச்சுறுத்தி வருகின்றன. மாநகராட்சியின், 41வது வார்டு முருகம்பாளையம் ஜம்மனை ஓடைக்குள், கோழி இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதன்காரணமாக, எப்போதும், தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக வந்து முகாமிடுகின்றன. மாலை நேரத்துக்கு பிறகு, அவ்வழியாக சென்று வரும் டூவீலர்களை விரட்டிச்சென்று, வாகன ஓட்டிகளை அதிர்ச்சிடைய வைக்கின்றன. இதன்காரணமாக, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதுகுறித்து முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், 'திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளை மட்டுமே மாநகராட்சி சுத்தம் செய்கிறது.
முருகம்பாளையம் ஓடை பல ஆண்டுகளாக துார்வாரிசுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. குறிப்பாக, கோழி இறைச்சிகளை கொட்டுவதால், தெருநாய்கள் முகாமிட்டு, அச்சுறுத்தி வருகின்றன. அங்கு வரும் நாய்கள், வீடுகளில் வளர்க்கும் கோழிகளையும் பிடித்துச்செல்கின்றன; தெருநாய்களை கட்டுப்படுத்த, கோழி இறைச்சி கொட்டுவதை அடியோடு தடுக்க வேண்டும்,' என்றனர்.