/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொங்கு குலாலர் குருப்ப நாடு வம்ச அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம்
/
கொங்கு குலாலர் குருப்ப நாடு வம்ச அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம்
கொங்கு குலாலர் குருப்ப நாடு வம்ச அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம்
கொங்கு குலாலர் குருப்ப நாடு வம்ச அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 25, 2025 11:50 PM

அவிநாசி; திருமுருகன்பூண்டி அருகே ராக்கியாபாளை யத்தில் உள்ள ராசாத்தாள் ராக்கியண்ணன் கோவில் - கொங்கு குலாலர் குருப்ப நாடு வம்சம், 23ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், அவிநாசியிலுள்ள குலாலர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டத்துக்கு முன்னாள் தலைவர் வக்கீல் ராஜேந்திரன், செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வருடாந்திர வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து புதிய நிர்வாக குழு தேர்தல் நடைபெற்றது. மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடாசலம், அன்னுார் கணேசமூர்த்தி ஆகியோர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.
புதிய தலைவராக மனோகரன், செயலாளராக செல்வராஜ், பொருளாளராக அருணாசலம், தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை தலைவர்களாக பழனிசாமி, மணி, துணை செயலாளர்களாக ராஜேந்திரன், நடராஜன், சகுந்தலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.