/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'
/
'எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை செயலாகட்டும்'
ADDED : பிப் 24, 2024 12:07 AM
திருப்பூர்:''எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும்'' என, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டமைப்பு செயலர் நல்லசாமி அறிக்கை:
இலவசம், மானியம், சலுகை, கடன், கடன் தள்ளுபடி போன்றவற்றை விவசாய பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வை கொடுக்காது. விவசாயிகளுடைய வாழ்க்கை தரமும், வாங்கும் சக்தியும் கூடப்போவதில்லை. அரசு அறிவித்தபடி விவசாயிகளுடைய வருமானமும், இவற்றால் இரட்டிப்பாகி விடாது.
இவ்வாறான திட்டங்கள் விவசாயிகளுடைய தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும், விடுக்கும் சவாலே ஆகும். சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசு நடைமுறைபடுத்துவதை போல, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு தலைமையிலான விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும். இதுவே அனைத்து விவசாய பிரச்னைகளுக்கும் நிரந்தர தீர்வை பெற்றுதரும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

