/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அலட்சியத்துக்கு பலியான 'உயிர்' இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல் l நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கண்டனம் l இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல்
/
அலட்சியத்துக்கு பலியான 'உயிர்' இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல் l நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கண்டனம் l இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல்
அலட்சியத்துக்கு பலியான 'உயிர்' இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல் l நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கண்டனம் l இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல்
அலட்சியத்துக்கு பலியான 'உயிர்' இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல் l நெடுஞ்சாலைத்துறைக்கு மக்கள் கண்டனம் l இனியாவது விழித்து கொள்ள அறிவுறுத்தல்
ADDED : ஜன 14, 2024 12:34 AM

அவிநாசி:அவிநாசியில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைக்கும் பணியில் காட்டிய அலட்சியம், ஒரு இளைஞரின் உயிரை பறித்து விட்டது.
அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், கைகாட்டிப்புதுாரில் இருந்து பழங்கரை ரவுண்டானா வரை மாநில நெடுஞ்சாலை துறையினர் சார்பில், சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ஒரு வழிப்பாதையிலேயே எதிரும் புதிருமாக வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிகளை மேற்கொண்ட கைகாட்டிப்புதுார் முதல் ரவுண்டானா வரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லுாரி, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் என அரசு சார்ந்த துறைகளும், பனியன் ஏற்றுமதி நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இதனால், அதிக அளவில் வாகன போக்குவரத்து இருக்கும் சூழலில் நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்கும் பணியில் இரண்டு பக்கமும் பழைய ரோட்டை தோண்டி விட்டு புதியதாக அமைக்கும் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் ரோட்டில் உள்ள டயர் ரீட் டிரேடிங் கம்பெனியில் வேலை பார்த்து வரும் அபிராமி கார்டனை சேர்ந்த பாலு என்பவரின் மகன் ராஜா 33, டூவீலரில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது எதிர் திசையில் டிராக்டரில் கான்கிரீட் கலவை மெஷினுடன் இணைந்த வாகனம் வந்துள்ளது.
ஒரு வழிப்பாதையில், எதிர் திசையில் வந்த டிராக்டர், ராஜாவின் டூவீலர் மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட கான்கிரீட் கலவை மெஷின் வாகனம் ராஜாவின் தலை மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தின்றிபணியில்லை...
அவிநாசி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆங்காங்கே புதிதாக சாலை அமைக்கும் பணிகளை அவ்வப்போது செய்து வருகின்றனர். ஆனால், ஒருபோதும் விபத்து நடைபெறாமல் எந்த பணிகளையும் முடித்ததில்லை. கடந்த ஒரு வார காலமாக இந்த சாலை பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், எந்த இடத்திலும் அதற்கான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவில்லை.
வாழ வேண்டிய வயதில் இளைஞர் ஒருவர் உயிரை விட்ட பின்னரும் கூட, இன்று (நேற்று) நடைபெற்று வரும் பணிகளும் மிக அலட்சியமாக நடக்கிறது. மாற்றுப் பாதையில் செல்வதற்கான நடவடிக்கையை யாரும் செய்யவில்லை. இறந்த வாலிபரின் குடும்பத்துக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் வாயிலாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
- ரவிக்குமார்,நல்லது நண்பர்கள்அறக்கட்டளை நிறுவனர்.
எச்சரிக்கை செய்தோம்...
சாலை அமைக்கும் பணிகள் துவங்கிய முதல் நாளே, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் 'முறையான அறிவிப்பின்றி பணியை மேற்கொள்வது ஆபத்தானது. கனரக வாகனங்களை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்ய அறிவிப்பு பலகை மற்றும் பணிகள் குறித்த அறிவிப்பை இரண்டு பகுதிகளிலும் வைக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலை துறையினர் செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் அவிநாசி பகுதி யில் நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ளும் பணிகளில் அசம்பாவிதங்கள், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்ட வண்ணம் உள்ளது. குறிப்பாக, நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மிக அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இது குறித்து, உயரதிகாரிகளுக்கு அறிக்கைஅனுப்ப உள்ளோம்.
- சக்திவேல், போக்குவரத்துஇன்ஸ்பெக்டர்.

