/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தங்கை மகளுக்கு குதிரையுடன் 150 வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கிய தாய் மாமன்கள்

ADDED : பிப் 02, 2024 04:47 PM

காங்கேயம் : காங்கேயத்தில், தங்கை மகளுக்கு, 150 வகை சீர்வரிசை பொருட்களுடன், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரையை, தாய் மாமன்கள் சீராக வழங்கினர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே காஞ்சார்பாளையத்தை சேர்ந்தவர்கள் சம்பத்-ரம்யா தம்பதியின், 12 வயது மகளின் பூப்புனித நீராட்டுவிழாவை, சொந்த ஊரில் நடத்த திட்டமிட்டனர்.
சிறுமியின் தாய்மாமன்கள், 15க்கும் மேற்பட்டோர் இணைந்து, 150க்கும் மேற்பட்ட தட்டுகளில் சீர் வரிசை பொருட்களை, உற்றார் உறவினர்கள் புடைசூழ, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குதிரையுடன் ஈஸ்வரன் கோவிலில் இருந்து, தங்கை வீட்டிற்கு கொண்டு சென்றனர். குதிரையுடன் தாய் மாமன்கள் சீர் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து வியந்தனர்.