/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டுக்கு அல்ல ரோட்டில்... 3 மாதமாக வீணாகும் தண்ணீர் சாலை சேதம்: அதிகாரிகள் 'கப்சிப்'
/
வீட்டுக்கு அல்ல ரோட்டில்... 3 மாதமாக வீணாகும் தண்ணீர் சாலை சேதம்: அதிகாரிகள் 'கப்சிப்'
வீட்டுக்கு அல்ல ரோட்டில்... 3 மாதமாக வீணாகும் தண்ணீர் சாலை சேதம்: அதிகாரிகள் 'கப்சிப்'
வீட்டுக்கு அல்ல ரோட்டில்... 3 மாதமாக வீணாகும் தண்ணீர் சாலை சேதம்: அதிகாரிகள் 'கப்சிப்'
ADDED : ஜன 21, 2024 12:20 AM

திருப்பூர்;திருப்பூர், பி.என்., ரோட்டில், குழாய் உடைந்து தண்ணீர் மூன்று மாதமாக வீணாகி, சாலையும் சேதமாகி விட்டது. விபத்துகள் நேரிடுகிறது.
திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு, பூலுவப்பட்டி சிக்னல் அருகே உள்ளது, மும்மூர்த்தி நகர். இப்பகுதியில், மெயின் குழாய் உடைப்பு ஏற்பட்டு, 24 மணி நேரமும் தண்ணீர் வீணாகிறது. தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் பி.என்., ரோட்டில், பழனிசாமி நகர் வரை, 100 மீ., துாரத்துக்கு தண்ணீர் வழிந்தோடுகிறது. அதிக பாரத்துடன் சாலையில் ஓடும் நீரில் வாகனங்கள் தொடர்ந்து பயணிப்பதால், சாலையே குழியாகி விட்டது.
அப்பகுதியினர் கூறியதாவது:
கடந்த, நவ., மாதம் குழாய் உடைப்பு ஏற்பட்டது; மூன்று மாதமாகியும் சரிசெய்யவே இல்லை. உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்துக்கு அருகில் கேட்வால்வு இருப்பதால், குடிநீர் வடிகால் வாரிய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வந்து பார்த்து விட்டு, சென்று விடுகின்றனர். சரி செய்ய முயற்சிப்பதில்லை.
பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இரவும், பகலும் தண்ணீர் வீணாவது தொடர்கிறது. இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். தினம் ஒரு விபத்து இவ் விடத்தில் நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'ரிங் ரோடும்'இப்படித்தான்...
பெருமாநல்லுார் மெயின் ரோடு தான் இப்படி என்றால், பூலுவப்பட்டியில் இருந்து திருமுருகன்பூண்டி செல்லும் ரிங்ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் நான்கு மாதமாக வீணாகி, சாலை அரையடி குழியாகியுள்ளது. வரதராஜ பெருமாள் கோவில், கூட்டுறவு நகர், செட்டிபாளையம் சந்திப்பு பகுதியில் பாதி சாலை தான் மீதி சாலை மண் செருமி ஜல்லிக்கற்களுடன் காணப்படுகிறது. 'பேட்ஜ்ஒர்க்' அரைகுறையாக முடிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனம் ஒருபுறம் இயங்கும் போது, மறுபுறத்தில் பிற வாகனங்கள் விலகி செல்ல கூட வழியில்லை. விபத்து ஏற்படும் சூழல் தான் உள்ளது.
குழாய் உடைப்பையும், சாலையையும் சீரமைக்க வேண்டும் என்கின்றனர், வாகன ஓட்டிகள்.

