/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுடன் அமைதி பேச்சு வங்கி நிர்வாகம் ஒத்துழைப்பு
/
விவசாயிகளுடன் அமைதி பேச்சு வங்கி நிர்வாகம் ஒத்துழைப்பு
விவசாயிகளுடன் அமைதி பேச்சு வங்கி நிர்வாகம் ஒத்துழைப்பு
விவசாயிகளுடன் அமைதி பேச்சு வங்கி நிர்வாகம் ஒத்துழைப்பு
ADDED : ஜன 14, 2024 12:31 AM

பல்லடம், ஜன. 14-
பல்லடம் அடுத்த, வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து, அருணாசலம்; விவசாயிகள். கேத்தனுாரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், சொத்து பத்திரங்களை அடமானம் வைத்து, பயிர் கடன் பெற்றிருந்தனர்.
கடனை திருப்பி செலுத்திய பின்னும், சொத்து பத்திரங்களை வங்கி நிர்வாகம் திருப்பி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. விவசாயிகள் போராட்டம் நடத்த தயாராகினர். இதையடுத்து, பல்லடம் தாசில்தார் தலைமையில் இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கடந்த வாரம் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் கேள்விகளுக்கு வங்கி அதிகாரிகளால் பதில் கூற முடியவில்லை. இதையடுத்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்க, மாரிமுத்து பத்திர பதிவு செய்வதற்கு வசதியாக, வங்கி முதன்மை மேலாளர் மூலம் கடிதம் வழங்கப்பட்டது. பத்திர பதிவு அலுவலகத்தில் ஏதேனும் ஆட்சேபணை தெரிவித்தால், வங்கி பேனல் வழக்கறிஞர் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.
இதுதவிர, அருணாசலத்தின் சொத்து பத்திர ஆவணங்கள், பிப்., 27ம் தேதிக்குள் ஒப்படைக்கப்படும் என்றும் வாங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைக்கு வங்கியினர் ஒப்புதல் அளித்ததால், அமைதிப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது. 'வரும், பிப்., 27ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும்,' என்று தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் அறிவித்தார்.

