/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் வினியோகம் குளறுபடி: மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
குடிநீர் வினியோகம் குளறுபடி: மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடிநீர் வினியோகம் குளறுபடி: மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
குடிநீர் வினியோகம் குளறுபடி: மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : பிப் 02, 2024 12:31 AM

பல்லடம்:பல்லடம் அருகே, வார்டு உறுப்பினரை கண்டித்து, பொதுமக்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம் ஒன்றியம், வடுகபாளையம்புதுார் ஊராட்சி, 3வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மூன்று மாதமாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படுவதில்லை என, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். வார்டு உறுப்பினர் செல்வராஜின் செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம் என்று கூறி, பெண்கள், பொதுமக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் கூறியதாவது:
இங்கு குடிநீர் வினியோகிக்கும் ஊராட்சி பணியாளர் முறைகேடாக செயல்படுவதாக கூறி, குடிநீர் அறையை பூட்டி சாவியை வார்டு உறுப்பினர் செல்வராஜே வைத்துக் கொண்டுள்ளார். உள்ளாட்சி சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இவர் செயல்பட்டு வருகிறார்.
இதனால், குடிநீர் கிடைக்காமல் மூன்று மாதமாக அவதிக்குள்ளாகி வருகிறோம். பொதுமக்களுக்கு எதிராக செயல்படும், வார்டு உறுப்பினர் செல்வராஜை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.
தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஊராட்சி தலைவர் என்ன சொல்கிறார்?
ஊராட்சி தலைவர் புனிதா சரவணன் கூறியதாவது: வார்டு கவுன்சிலர் செல்வராஜ் தான் ஆரம்பம் முதல் குடிநீர் வினியோகிப்பாளராக இருந்தார். உடல் நலக்குறைவாக இருந்தபோது, வேறு நபர் நியமிக்கப்பட்டார். இவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. பொதுவான வேறு நபரை நியமிக்க திட்டமிட்டுள்ளோம்.

