/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
/
பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜன 19, 2024 04:36 AM

பொங்கலுார் : விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில், 21ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள் கோவிலில் கடந்த கும்பாபிஷேக விழா துவங்கியது. விழாவையொட்டி நேற்று பெண்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவில் சென்று வழிபட்டனர். இன்று காலையில், முதலாம் கால யாகபூஜை துவங்குகிறது. மாலை இரண்டாம் கால யாக பூஜை, நாளை மூன்றாம் காலம், மாலை நான்காம் காலம் பூஜை நடக்கிறது.
வரும், 21ம் தேதி காலை, 9:00 மணிக்கு கோபுர விமானங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன்பின், மகாபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதணை நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிேஷக விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

