/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 துணைத்தேர்வு வினாத்தாள்கள் வந்தன
/
பிளஸ் 2 துணைத்தேர்வு வினாத்தாள்கள் வந்தன
ADDED : ஜூன் 24, 2025 10:03 PM
- நமது நிருபர் -
பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு துணைத்தேர்வை தேர்வுகள் துறை அறிவித்தது.
திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு, 1,379 பேர்; பிளஸ் 1ல், 1,095, பிளஸ் 2வில் 547 பேர் என, மொத்தம், 3,021 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 துணைத்தேர்வு, இன்றும் (25ம் தேதியும்), பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, ஜூலை, 2ம் தேதியும், பிளஸ் 1 துணைத் தேர்வு ஜூலை, 4ம் தேதியும் துவங்குகிறது. இத்தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து திருப்பூர் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இருபள்ளிகளில் வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள்கூறுகையில், 'துணைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நடப்பு கல்வியாண்டே தேர்ச்சி பெறும் வகுப்பில் இணைந்து விட முடியும். பொறுப்பு உணர்ந்து துணைத்தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்றனர்.