பூச்சி மருந்தில் விவசாயி தற்கொலை
காங்கயம், வரதப்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி, 44; விவசாயி. இவர் திருமணமாகாத விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையானார். மனமுடைந்து இருந்து வந்த நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்தார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே மயில்சாமி இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய்கள் கடித்த 4 ஆடுகள் பலி
வெள்ளகோவில், உப்புபாளையம் ரோடு, சக்தி நகரை சேர்ந்தவர் தண்டபாணி, 62; விவசாயி. இவரது வீட்டு பட்டியில், பத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அடைத்து விட்டு, துாங்க சென்றார். நேற்று அதிகாலை, ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு, தண்டபாணி சென்று பார்த்தார்.தெரு நாய் கடித்ததில், நான்கு ஆடுகள் இறந்து கிடந்தது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தெரு நாய்களை கட்டுப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

