3 சவரன் நகை திருட்டு: திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் உத்திரமதன், 47. இவர் கடந்த, 16ம் தேதி குடும்பத்துடன் சொந்த ஊரான தென்காசிக்கு சென்றார். பின், வீட்டுக்கு திரும்பிய போது, வீட்டின் மெயின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பெட்ரூம் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 3 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவியிடம் வழிப்பறி: பல்லடம் அருகே கரைப்புதுார் -- சின்னக்கரை செல்லும் ரோட்டில், கல்லுாரி மாணவி ஒருவர் நேற்று மாலை நடந்து சென்றார். அவரை பின் தொடர்ந்து, பைக்கில் வந்த ஆசாமிகள் மூன்று பேர், மாணவி கையில் வைத்திருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார், அப்பகுதியிலுள்ள 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

