நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் : அவிநாசி பாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் பொங்கல் விழாவையொட்டி, கல்லுாரி முன்பு கோலமிட்டு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பபொங்கல் வைக்கப்பட்டது.
பொங்கல் பொங்கியதும் மாணவர்கள் 'பொங்கலோ பொங்கல்' என்று உற்சாகமாக கொண்டாடினர். மாணவர்கள் பொங்கல் பாடல்களை பாடினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, நிர்வாக அலுவலர் சந்திரசேகரன், கல்லுாரி முதல்வர் திருமலை, பேஷன் டெக்னாலஜி துறைத் தலைவி சுகந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

