/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சக் ஷம் அமைப்பு சார்பில் செயற்கை கால் வழங்கல்
/
சக் ஷம் அமைப்பு சார்பில் செயற்கை கால் வழங்கல்
ADDED : ஜன 14, 2024 12:32 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்ச்சி மங்கலம் ரோடு, எக்ஸெல் ஏற்றுமதி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
செயற்கை அவயம் பெற விண்ணப்பித்து அளவீடு செய்து கொண்ட ஏழு பேருக்கு, அந்நிறுவன வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதற்கான நிதி பங்களிப்பை அந்நிறுவனத்தில் பணியாற்றும் அலுவலக பணியாளர்கள் அளித்தது குறிப்பிடத்தக்கது. நிறுவன தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.
சக் ஷம் அமைப்பின் மாவட்ட தலைவர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், நிறுவன நிதி ஆலோசகர் முரளி, மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பயனாளிகளுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளும் வழங்கப்பட்டன.

