/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குவெஸ்ட் பள்ளி விழா மாணவர்கள் உற்சாகம்
/
குவெஸ்ட் பள்ளி விழா மாணவர்கள் உற்சாகம்
ADDED : மார் 28, 2025 03:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அவிநாசி அருகே அவிநாசிலிங்கம்பாளையத்தில் இயங்கி வரும், தி குவெஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
விழாவில், மழலைகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குழந்தைகளின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. மொபைல் போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளில், தங்கள் குழந்தைகளின் திறமையை கண்டு, பெற்றோர் வியப்படைந்தனர். விழாவில், பள்ளி தலைவர் கலாமணி, பள்ளி இயக்குனர் தர்ஷன், தாளாளர் நிவேதா, பள்ளி முதல்வர் வினோதா ஆகியோர் பங்கேற்றனர்.