/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் கட்டணத்தை குறைத்து தொழிலை பாதுகாக்க வேண்டும்! அரசுக்கு 'டீமா' வலியுறுத்தல்

ADDED : ஜன 10, 2024 12:10 AM
திருப்பூர்:தமிழக அரசு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதனால், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் தொழில்துவங்க முதலீடுகளை ஈர்த்துள்ளது. நாட்டின், 3வது இடத்தில் உள்ள தமிழகம் தொழில் வளம் மிகுந்த மாநிலமாக இருக்கிறது.
அவ்வகையில், வெளிநாடு மற்றும் வெளிமாநில நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் துவங்க முன்வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் புதிய தொழில்துவங்க முதலீடு செய்வது ஊக்குவிப்பதை போல், நலிந்துள்ள குறு, சிறு தொழில்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
தமிழகத்தில் நீண்ட நாட்களாக, குறு, சிறு தொழில்கள் நல்லமுறையில் நடந்து வருகிறது. அதன் காரணமாக, வெளிமாநில நிறுவனங்களும் தொழில் துவங்க தமிழகம் வருகின்றன. இந்நிலையில், குறு, சிறு தொழில்களை, நலிவு நிலையில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
முதலில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். குறு, சிறு தொழில்துறை பிரதிநிதிகளை அழைத்து பேசி, உதவிகளை வழங்க, அரசு முன்வர வேண்டும், என்றார்.