/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சிதிலமடைந்த உபகரணங்கள் அகற்றுங்க
/
நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சிதிலமடைந்த உபகரணங்கள் அகற்றுங்க
நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சிதிலமடைந்த உபகரணங்கள் அகற்றுங்க
நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சிதிலமடைந்த உபகரணங்கள் அகற்றுங்க
ADDED : ஜன 22, 2024 08:39 PM
உடுமலை:உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் சிதிலமடைந்த உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு உபகரணங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுமலைநகர் மற்றும் சுற்றுபகுதி கிராமங்களிலிருந்தும், பள்ளி மாணவர்களும் விளையாட்டு பயிற்சி பெற நேதாஜி விளையாட்டு மைதானத்தை பயன்படுத்துகின்றனர். காலை, மாலை நேரங்களில் முதியவர்கள், பெண்கள், என பலரும் நடைபயிற்சி செய்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான உடற்பயிற்சி தளவாடங்களும் அமைக்கப்பட்டன. தற்போது இந்த தளவாடங்களில், பலவும் சிதிலமடைந்து பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளது. இளைஞர்கள் கைகால்களுக்கான பயிற்சி பெறும் தளவாடம், குழந்தைகளுக்கான ஊஞ்சல், சறுக்கல் உட்பட பல்வேறு தளவாடங்கள் சிதிலமடைந்துள்ளது.
நாள்தோறும், பல பெற்றோர் குழந்தைகளை பொழுதுபோக்கிற்காக மைதானத்துக்கு அழைத்து வருகின்றனர். ஆபத்தை உணராமல் சில குழந்தைகள் இவற்றை பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் இவற்றை பயன்படுத்தும்போது காயமடைவது, கீழே விழுந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சி செய்வதற்கான தளவாடங்களும் முறையான பராமரிப்பில்லாமல் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

