/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் குப்பை; குடியிருப்போர் நலச்சங்கம் அதிருப்தி
/
குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் குப்பை; குடியிருப்போர் நலச்சங்கம் அதிருப்தி
குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் குப்பை; குடியிருப்போர் நலச்சங்கம் அதிருப்தி
குடியிருப்புகளுக்கு மத்தியில் மீண்டும் குப்பை; குடியிருப்போர் நலச்சங்கம் அதிருப்தி
ADDED : பிப் 12, 2024 12:10 AM
உடுமலை:உடுமலையில், பழைய குப்பை கிடங்கில், மீண்டும் குப்பை அரைக்கும் கட்டமைப்பு நிறுவி, பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பணியை நிறுத்த வேண்டும், என, குடியிருப்போர் நல சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உடுமலை நகரின் மத்தியில், தாராபுரம் ரோடு, சிவசக்தி காலனி பகுதியில், 4 ஏக்கர் பரப்பளவில் உடுமலை நகராட்சி குப்பை கிடங்கு செயல்பட்டு வந்தது.
இதனை சுற்றிலும், சிவசக்தி காலனி, காந்திநகர் - 2, புஷ்பகிரி வேலன் நகர், காமராஜ் நகர், வாசுகி நகர், செல்லம் நகர், சங்கர் நகர் என ஏராளமான குடியிருப்புகளில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற வேண்டும், என, இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதன் காரணமாக, 30 ஆண்டுக்கு முன், கணபதிபாளையத்திற்கு குப்பை கிடங்கு மாற்றப்பட்டது. ஆனால், பழைய குப்பை கிடங்கில் தேங்கியுள்ள குப்பை முறையாக அகற்றப்படாமல் உள்ளது. சுற்றுப்புற பகுதிகளிலிருந்து குப்பை கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது.
எப்போதும் குப்பை எரிவதால், சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களுக்கு, மூச்சுத்திணறல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இறைச்சி உள்ளிட்ட அபாயகரமாக கழிவு கொட்டப்படுவதால், சுகாதார கேடு ஏற்படுகிறது.
முழுமையாக குப்பையை அகற்றி, நடை பயிற்சி, விளையாட்டு மைதானம், பூங்கா, காய்கறி சந்தை , பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம், வணிக வளாகம், பூ மார்க்கெட் ஏதாவது ஒன்று அமைக்க வேண்டும், என, குடியிருப்போர் நல சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர்.

