நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற மத்திய அரசின் சங்கல்ப யாத்திரை நிகழ்ச்சி மங்கலத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் நலத்திட்ட பார்வையாளர் மோகன் குமார், பா.ஜ., மங்கலம் ஊராட்சி தலைவர் சீனிவாஸ், தெற்கு ஒன்றிய பொது செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் வேளாண்துறை, வங்கித்துறை, மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, மத்திய அரசின் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து விளக்கினர். பா.ஜ., நிர்வாகிகள், மற்றும் மக்கள் பங்கேற்றனர்.

