/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்
/
சிதறும் ஜல்லிக்கற்கள்; விபத்து அபாயம்
ADDED : அக் 23, 2025 12:47 AM

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குவாரிகள் மற்றும் சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனங்கள் பரவலாக செயல்படுகின்றன.
அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிமென்ட் கலவை, ஜல்லிக்கற்கள் லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. செல்லும் வழியில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கினால் சிமென்ட் கலவை மற்றும் ஜல்லிக்கற்கள் சிதறுவதை தவிர்க்கலாம்.
ஆனால், அதிவேகமாக இயக்குவதால், சாலையில் பல இடங்களில் எல்லாம் ரோட்டில் சிமென்ட் கலவை மற்றும் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன.இதனால், ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
எனவே, சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதுகாப்பான முறையில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். ரோட்டில் எங்கும் சிதற விடக்கூடாது. அப்படியே சிதறினாலும் அவற்றை அவர்களே அப்புறப்படுத்த வேண்டும்.

