/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளி வேன் மீது பஸ் மோதி விபத்து
/
பள்ளி வேன் மீது பஸ் மோதி விபத்து
ADDED : ஜன 21, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் அருகே தனியார் பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதி ஏற்பட்ட விபத்தில், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பல்லடம் அருகேயுள்ள மேட்டுக்கடையில் உள்ள தனியார் பள்ளி வேன் ஒன்று, நேற்று காலை, மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் பள்ளிக்கு சென்றது.
தாராபுரம் ரோடு, கள்ளிப்பாளையம் பகுதியில், ரோட்டை கடக்கமுயன்ற போது, மதுரை -- கோவை செல்லும் அரசு பஸ், எதிர்பாராத விதமாக, பள்ளி வேனின் வலதுபுறமாக மோதியது. குறைந்தளவு மாணவ, மாணவியரே பள்ளி வேனில் இருந்ததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

