ADDED : பிப் 02, 2024 12:24 AM

கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, இறை சேவைக்காக சிவனடியார்கள் வந்துள்ளனர். குறிப்பாக, மா காப்பு, சந்தனகாப்பு மற்றும் உக்ராணம் பணிக்காக வந்துள்ளனர்.
சுவாமி விக்ரஹங்களில் உள்ள அழுக்கை அகற்ற, மா காப்பு சாற்றி சுத்தம் செய்தனர். யாகசாலையில், 108 வகையான மூலிகைகள் வேள்வியின் போது சமர்ப்பிக்கப்படுகிறது. அவற்றை, சரியான வரிசையில் எடுத்து கொடுப்பதே உக்ராணம்; அதற்காகவும், சிவனடியார்கள் அதிகம் பேர் வந்துள்ளனர்.
கும்பாபிேஷக விழாவுக்கு முந்தைய நாள், மூலாலய மூர்த்திக்கு, சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. வசம்பு உள்ளிட்ட வாசனை திரவியங்களால், மூலவர் லிங்கத்துக்கு காப்பிடப்படும்.
சந்தனகாப்பிடுவதால், சுகந்த நறுமணத்தில் மகிழும் சர்வேஸ்வரன், அடுத்து வரும், 48 நாட்களுக்கு மகிழ்ச்சி குறையாமல் விற்றிருந்து அருள்பாலிப்பார் என்ற ஐ தீகம் இருப்பதாக, சிவனடியார்கள் தெரிவித்தனர்.
இறைசேவையில் தான் எவ்வளவோ புண்ணியம் இருக்கிறது. அன்னசத்திரம் கட்டவில்லை... ஆலயம் கட்டவில்லை... எங்களால் முடிந்த சேவையை ஈசனுக்கு செய்கிறோம் என்று, சிவனடியார்கள் அவிநாசியில் குவிந்துள்ளனர்.

