/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு ஆலோசனை
/
வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு ஆலோசனை
ADDED : செப் 26, 2025 06:42 AM
திருப்பூர்; ஊத்துக்குளி பகுதியில் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவது குறித்து ஆலோசனைக் கூட்டம், பெருமாநல்லுாரில் வரும், 29ம் தேதி நடைபெறுகிறது.
திருப்பூர் மின் பகிர்மான வட்டம், ஊத்துக்குளிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில் மின் இணைப்புகளை சோலார் மின் இணைப்பு களாக மாற்றப்படவுள்ளது. பிரதமரின் சூரிய வீடு இலவச மின் இணைப்புகளாக இவை மாற்றப்படும். இது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 29ம் தேதி, பெருமாநல்லுார், பாலசமுத்திரம் ஸ்ரீ லட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
அன்றைய தினம், காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி இம் முகாம் நடைபெறும். இத்திட்டத்தில் விரைவாக மின் இணைப்புகள் வழங்குவது குறித்த வங்கி அலுவலர்கள் பங்கேற்று விளக்கவுள்ளனர். சோலார் மின் தகடு அமைக்கும் நிறுவனத்தினர்; மின் இணைப்பு மற்றும் அரசு மானியம் பெறுவது குறித்து மின் வாரியத்தினர் விளக்கம் அளிக்க உள்ளதாக, ஊத்துக்குளி மின் வாரிய செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.