/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு மாநில பொறுப்பு
/
'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு மாநில பொறுப்பு
ADDED : ஜன 24, 2024 01:25 AM
திருப்பூர்;முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், அ.தி.மு.க., ஜெ., பேரவை மாநில இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மற்றும் காங்கயம் தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க., வில், தலா, இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்று பிரிக்கப்படுகிறது.
கூடுதல் நிர்வாகிகள் இருந்தால், கட்சி வலுவாக இருக்கும்; தேர்தல் பணியும் எளிதாக இருக்குமென, கட்டமைப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. திருப்பூர் மாநகர் மாவட்டம், இரண்டாக பிரிய வாய்ப்புள்ளது. அதன்படி, முன்னாள் எம்.பி., சிவசாமி, எம்.எல்.ஏ., ஆனந்தன் ஆகியோர், மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க காய்நகர்த்தி வருகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், மாவட்ட செயலாளர் பதவி இல்லாதபட்சத்தில், மாநில பொறுப்பு வேண்டுமென 'டிமாண்ட்' வைத்திருந்தார். இந்நிலையில், கட்சியின் ஜெ., பேரவை மாநில இணை செயலாளராக, குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர் மாவட்டத்தில், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், மாவட்ட ஜெ., பேரவை தலைவராக இருந்த 'அட்லஸ்' லோகநாதன், ஜெ., பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளராக, லோகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளராக, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார் சாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளகோவிலை சேர்ந்த கண்ணுசாமி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏ., வுக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,வில், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

