/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இப்படியும் ஒரு அறிவிப்பு; அறநிலையத்துறை 'புதுமை'
/
இப்படியும் ஒரு அறிவிப்பு; அறநிலையத்துறை 'புதுமை'
ADDED : ஜன 24, 2024 01:44 AM

பல்லடம்;பல்லடம், மாதப்பூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள முத்துக்குமாரசாமி கோவிலுக்கு சொந்தமாக, பல நுாறு ஏக்கர் நிலங்கள் உள்ளன. அறநிலையத்துறை மூலம் நிலங்கள் கையகப்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மாதப்பூர் கிராமத்தில் உள்ள, 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், சமீபத்தில் மீட்கப்பட்டு அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு பலகையில், சர்வே எண், விஸ்தீரனம், மொத்த ஏக்கர் உள்ளிட்ட எந்த விவரங்களும் இடம்பெறவில்லை. கையகப்படுத்தப்பட்ட நிலம் எங்கு உள்ளது, எத்தனை ஏக்கர் என்பது உள்ளிட்ட விவரங்கள் இல்லாததால், நிலம் எங்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது.
கோவில் நிலம் என்பதும், ஆக்கிரமிப்பாளர் களால் கபளீகரம் செய்யப்படாமல் இருக்கவுமே, மீட்கப்படும் கோவில் நிலங்கள் அருகே அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுகின்றன. ஆனால், மாதப் பூரில், வைக்கப்பட்டுள்ளது முழுமை பெறாத அறிவிப்பு பலகையாக உள்ளது.

