ADDED : ஜன 21, 2024 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் அருகே ஊராட்சி தலைவர், உடல் நலக்குறைவால் இறந்தார்.
பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்மணி, 37. அ.தி.மு.க.,வை சேர்ந்த இவர், கணையம் பாதிக்கப்பட்டு, கடந்த மூன்று மாதமாக, வேலுாரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை, 6.30 மணிக்கு உயிரிழந்தார். இவரது உடல், இன்று இச்சிப்பட்டியில் அடக்கம் செய்யப்படுகிறது.

