/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுப்ரீம் மொபைல்ஸில் 'சாம்சங் எஸ்24' அறிமுகம்
/
சுப்ரீம் மொபைல்ஸில் 'சாம்சங் எஸ்24' அறிமுகம்
ADDED : ஜன 24, 2024 01:42 AM

திருப்பூர்;சுப்ரீம் மொபைல்ஸ் ேஷாரூமில், சாம்சங் புதிய மாடலான 'சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரியஸ்', அறிமுக விழா, கோவை, 100 அடிரோட்டில் உள்ள சுப்ரீம் மொபைல்ஸ் கிளையில் நடந்தது.
புதிய மாடலை, சினிமா நடிகை சைத்திரா ரெட்டி அறிமுகம் செய்து வைத்தார். சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் கவுரிசங்கர், மண்டல விற்பனை மேலாளர் அருள்ஜோ, பிராந்திய விற்பனை மேலாளர்கள் சுரேஷ், சிவராஜ், கோவை கிளை மேலாளர் விவேக் மற்றும் சாம்சங் பகுதி வணிக மேலாளர் கோபிநாத் பங்கேற்றனர்.
நிறுவனத்தினர் கூறியதாவது:
இந்த புதிய மொபைல் போன், செயற்கை நுண் ணறிவு தொழில்நுட்பத்துடன் செயல்படுகிறது.
இதில், இமேஜ் ஆப்டிமைசேஷன், லைவ் வாய்ஸ் ட்ரான்ஸ்லேஷன் மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன. 50 எம்.பி., கேமாரா, 12 எம்.பி., அல்ட்ரா வைடு கேமரா, 10 எம்.பி., டெலி போட்டோ சென்சார் மற்றும் 21 எம்.பி., முன்பக்க கேமரா என பல வசதிகள் உள்ளன.
அறிமுக விழா ஆபராக, கேஷ் பேக், போனஸ் மற்றும் வட்டியில்லா இ.எம்.ஐ., உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. விவரங்களுக்கு, 98587 98587 என்ற மொபைல் எண்ணுக்கு 'Hi' என வாட்ஸ் ஆப் செய்தால், தகவல்களையும் பெற முடியும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

