/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடி வேளாண் அதிகாரிகள் ஆய்வு
/
ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடி வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடி வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ஒட்டு ரக மக்காச்சோள சாகுபடி வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 14, 2024 12:07 AM

பல்லடம்:பல்லடம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தின் சார்பில், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பெறப்பட்ட வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம், பல்லடம் அருகே, சேடபாளையம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை, கோவை வேளாண் பல்கலை தானிய இயக்குனர் ரவி கேசவன் ஆய்வு மேற்கொண்டார்.
இது குறித்து வேளாண் அலுவலர்கள் கூறுகையில், 'வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத் திட்டத்தில், கிலோ 100 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கப்பட்டது.
இதன்படி, வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள் வாங்கி சாகுபடி செய்த விவசாயியின் விளை நிலத்தில் ஆய்வு நடந்தது. இதர மக்காச்சோள விதைகளை காட்டிலும், இது, கூடுதல் விளைச்சல் தருவதால் விவசாயிகள் கூடுதல் வருவாய் பெற வாய்ப்பு உள்ளது,' என்றனர்.
இந்த ஆய்வின்போது பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் பல்லடம் வட்டார வேளாண் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

